Tuesday, January 3, 2012

அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் இணையதளத்தின் ஊடாக தொடர்புபடுத்தத் தீர்மானம்!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::நாட்டிலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் இணையதளத்தின் ஊடாக தொடர்புபடுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொலிஸ் மாஅதிபர் என்.கே.இளங்கக்கோனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய பல்வேறு கட்டங்களின் கீழ் இந்த வருடத்திற்குள் பொலிஸ் நிலையங்களை இணையதளத்தின் ஊடாக தொடர்புபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மக்களின் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்வதற்காக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனூடாக குற்றவாளிகளுக்கு எதிராக மிகவும் குறுகிய காலத்திற்குள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், புகைப்படங்கள் போன்ற சாட்சிகளை தாமதமின்றி பரிமாரிக்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment