Tuesday, January 3, 2012

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி.கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர் குமார் குணரட்ணத்தின் மனைவி பிள்ளைகள் விடுவிப்பு!

Tuesday, January 03, 2012 12
இலங்கை::கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி.கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர் குமார் குணரட்ணத்தின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் விசாரணையின் பின்னர் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரவிக்கின்றார்.

பேங்கொக் செல்வதற்காக நேற்றுக் காலை விமான நிலையத்திற்குச் சென்றபோதே இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

விசாரணைக்குட்படுத்தப்பட்ட இவர்கள், நேற்றிரவு 7 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் இவர்கள் பேங்கொக் சென்றாதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment