Sunday, January, 01,2012சென்னை:ரஹ்மான் யாழ்.வருகிறார் என்று வெளியான செய்திகள் வெறும் புரளி என்று அவரே தெரிவித்திருக்கிறார். தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, இரு “ஆஸ்கார்’ விருதுகளை வென்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வருகை தரவுள்ளார் என்று நேற்று செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் ரஹ்மானின் முகாமையாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படிப்பட்ட எந்த ஏற்பாடும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் இது தொடர்பிலான ரஹ்மானின் செய்தியையும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.
அதில், யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பில் எந்த ஒரு நிறுவனமும் தன்னுடன் தொடர்புகொள்ளவில்லை என்றும் அத்தகைய எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்வதாக யாருக்கும் தான் வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் இப்போதைக்கு இலங்கையில் நடக்கும் எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment