Tuesday, January 31, 2012இலங்கை::இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளது.
அமைச்சர்களான நிஇலங்கைமல் சிறிபால டி சில்வா, மஹிந்த யாப்பா அபயவர்தன, பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜோன் அமரதுங்க, புத்திக்க பத்திரன, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.
கடந்த 29ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட இக்குழுவினர் எதிர்வரும் 2ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர். 'இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது. இது ஒரு நல்லிணக்கத்திற்கான விஜயம் ஆகும்' என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment