Thursday, January 12, 2012இலங்கை::உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருடைய மனைவியெனக் கூறப்படும் பெண் ஒருவரால் அனுராதபுரம் நகரில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது விபசார விடுதியை நடத்திச் சென்ற பெண்ணும் அங்கு தங்கியிருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுராதபுரம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்களும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment