Friday, January 06, 2012புல்பானி:ஒடிசாவில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்த போலீசாரின் வாகனம், மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடியில் சிக்கியதில், மூன்று போலீசார் பலியாகினர்; மேலும் சிலர் காயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில், கோட்டகார்க் - ஸ்ரீராம்பூர் சாலையில், மாவோயிஸ்டுகள் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். இதில், ஒருவர் கொல்லப்பட்டார்.
அந்த இடத்தை ஆய்வு செய்ய ஒரு போலீஸ் குழுவினர் நேற்று வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் மாவோயிட்டுகளின் கண்ணி வெடியில் சிக்கியது. இதில், இரண்டு போலீசார், ஒரு ஊர் காவல் படை வீரர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், சிலர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீராம்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி பாலிகுடா சத்யஜித் நாயக் கூறுகையில், ""படுகாயம் அடைந்த மூன்று போலீசாரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், அவர்கள் எம்.கே.சி.ஜி., மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்,'' என்றார்.
No comments:
Post a Comment