Wednesday,January,11,2012 12இலங்கை::கடற்பரப்பை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டம் எதுவும்கிடையாது என மீன்பிடிவள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை தீர்க்கும்நோக்கில் கடற்பரப்புக்களை பகிர்ந்து கொள்ளும் யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்திதியாவின் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து, இந்தியகரையோரப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில்பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
கடற்பரப்பை பகிர்ந்து கொள்வதனால் இலங்கை மீனவர்களே பாதிக்கப்படுவர்என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கின் சில பகுதிகளில் இந்திய மீனவர்கள் அதிகளவில்அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment