Wednesday, January 11, 2012

தம்பிலுவில் சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த கமலராஜ் வயது (30) கம்பளை நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

Wednesday,January,11,2012 12
இலங்கை::இலங்கை::தம்பிலுவில் சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த கமலராஜ் வயது (30) கொத்மலை
பொலிஸ் பிரிவக்குட்பட்ட கம்பளை நுவரெலியா வீதியில் கழுத்து வெட்டப்பட்ட
நிலையில் சடலமாக
மீட்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொத்மலை
பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு போது இதுசம்பந்தமாக ஒருவர் பிடிக்கட்டதாகவும்
பொலிஸ் அதிகாரி முனசிங்க தெரிவித்தார். இவர் வெள்ளவத்தையிலுள்ள வாகன
உரிமையாளரிடம் சாரதியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த செவ்வாய்கிழமை
(03.01.2012) மாலை 3 மணியளவில் சுவிஸ் மற்றும் சவூதி ஆகியநாடுகள் இருந்து வந்த
இருவருடன் தான் கதிர்காமம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். எனினும் வாகனத்தை
ஓட்டிச் சென்ற சாரதியிடமிருந்து எந்த தொடர்பும் கிடைக்காததையடுத்து வாகன
உரிமையாளர் வெள்ளவத்தை பொலிஸில் இது தொடர்பாக புகார் தெரிவித்தார். கடந்த
புதன்கிழமை கண்டி நுவரெலியா வீதியோரமாகவுள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் சடலம்
ஒன்று காணப்படுவதாக பிரதேச வாசிகள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு
சென்ற கொத்மலை பொலிஸார் சடலத்தை மீட்டனர். எனினும் சடலம் தொடர்பான
அடயாளத்தை உறுதிப்படுத்த முடியாததிருந்ததினால் அடையாளம் காண்பதற்காக பொலிஸார்
சடலத்தை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைத்திருந்தனர். முகம் சுற்றிக்
கட்டப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்ட இச்சடலம்
கழுத்து வெட்டப் பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, நுவரெலியா வீதியில் மீட்கப்பட்ட கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்ட
நிலையில் சடலம் தொடர்பாக தகவல் கிடைக்கவே மேற்படி வாகனத்தின்
உரிமையாளரும், சாரதியின் நண்பர்கள் சிலரும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குச்
சென்று சடலத்தை பார்வையிட்டனர். இதன்போது சடலம் மேற்படி வாகன உரிமையாளரால்
தேடப்பட்ட சாரதி கமலராஜ் என்பவர் என்று உறுதி செய்யப்பட்டது. சம்பவம்
தொடர்பாக கொத்மலை பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை
கடத்திச் செல்லப்பட்ட வாகனம் புதிய ரக வான் ஒன்று என தெரிய வருகிறது

No comments:

Post a Comment