Thursday, January 5, 2012

யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளானது போதுமானதாக இல்லை:யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயம்!

Thursday,January 05, 2012
இலங்கை::யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளானது போதுமானதாக இல்லை எனவும் மீள்குடியேற்றம் துரிதப்படத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் ஆண்டகை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோம்ஸ் வோட்டனுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

இன்று யாழ்.ஆயர் இல்லத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இவ்விதம் யாழ்.ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர்களுக்கு தெளிவு படத்தியதுடன் மக்களின் தேவையும் அரசியல் தீர்வாகத்தான் இருக்கிறது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட அரசியல்வாதிகளோடு இலங்கை அரசு பேசி, தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டதுடன், புலம் பெயந்த தமிழ் மக்கள் இந்த அரசியல் தீர்வைபப் பெற்றுக் கொள்வதற்காக முயற்சிகள் எடுக்க வேண்டும் எனவும் ஆயர் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகள் மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை எனவும் மற்றங்கள் ஏற்பட்டு மக்கள் மகிழச்சியாக வாழ்வதற்குரிய சூழல் ஏற்படடுத்தப்பட வேண்டும் எனக் கேட்டக் கொண்டார்.

யாழ். ஆயருடனான சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் மக்ஸ்வெல் கீகெல், இலங்கைகான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ், யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் மற்றும் யாழ். மாவட்ட செயலரது பிரத்தியேக செயராளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment