Wednesday,January,11,2012 12இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் காரைநகர் பிரதேசசபை தலைவர் மீது நேற்று மாலை விசமிகள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காரைநகர் பிரதேசசபை எல்லக்குள் நடமாடிவரும் கட்டாக்காலி கால்நடைகளை பிரதேசசபை ஊடாக பிடித்து செல்ல முற்பட்டவேளையிலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.
காரைநகர் பிரதேசசபை எல்லைக்குள் கட்டுப்பாடற்று திரிந்து வரும் கால்நடைகள் தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றதாகவும் அது தொடர்பில் ஊடகங்கள் ஊடாகவும் பகிரங்கமாகவும் ஒலிபெருக்கிகள் மூலமாகவும் பல தடவைகள் தான் அறிவிப்புக்களை விடுத்திருந்ததாக பிரதேசசபை தலைவர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையினில் நேற்ற காரைநகர் தரவை பகுதியினில் கட்டாக்காலி ஆடு மற்றும் மாடுகளை பிடிக்கமுற்பட்ட பிரதேசசபை பணியாளர்களை சிலர் தாக்க முற்பட்டதாகவும் இதையடுத்து அங்கு சென்ற வேளையினில் பிரதேசசபை தலைவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த பிரதேச சபையின் எதிர்கட்சியாக உள்ள உறுப்பினர்கள் சிலரே இத்தாக்குதல் பின்னணியிலுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தாக்குதல் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக புலிகளின் மாவீரர் தின நாட்களில் ஆலய மணிகளை ஒலிக்க படயினர் தடை விதித்ததை தொடர்ந்து அதற்காக குரல் எழுப்பியவர்களுள் காரைநகர் பிரதேசசபை தலைவரும் ஒருவராவார். இதை தொடர்ந்து அவரது வீட்டின் மீது தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment