Friday, January 06, 2012சென்னை:சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பிரமாண் டமான முறையில் கட்டப்பட்டு இயங்கி வந்தது.
இந்த நூலகத்தை அங்கிருந்து அகற்றி விட்டு, குழந்தைகள் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசின் முடிவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், திமுக மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் ஒரு வாரம் நடந்தது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் 1.25 லட்சம் பேர், தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கையெழுத்திட்டனர்.
திமுக மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி தலைமையில், துணைச் செயலாளர்கள் கோவி.செழியன் எம்.எல்.ஏ., குத்தாலம் அன்பழகன், கோவை கணேஷ் குமார், பூவை ஜெரால்டு செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலையில், இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட் டது. நூலகத்தை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கையெழுத்துக்கள், இன்று (6ம் தேதி) மாலை 4 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ரோசய்யாவிடம் ஒப்படைக்கப்படுகின்றன. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கையெழுத்துக்களை ஒப்படைத்து,
பொதுமக்களின் எதிர்ப்பை தெரிவிக்கிறார். திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன், மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி, சட்டத் துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட குழுவினர், கவர்னரிடம் நூலக மாற்றத்துக்கு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை விளக்குகிறார்கள்.
No comments:
Post a Comment