Thursday, January 12, 2012

தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை –தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Thursday, January 12, 2012
இலங்கை::தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வினை புறக்கணிக்கப் போவதாக கூட்டமைப்பினர்அறிவித்துள்ளனர்.

தமிழ்ச் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும்,இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாது இவ்வாறான நிகழ்வுகளில்பங்கேற்பதில் அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment