Monday, January 2, 2012

இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் எந்தவொரு குழுவிற்கும் உதவிகளை வழங்கவில்லை-வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா!

Monday, January 02, 2012
புதுடெல்லி::இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் எந்தவொரு குழுவிற்கும் உதவிகளை வழங்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது.

உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்திய மத்திய அரசாங்கம், இலங்கையின் எந்தவொரு குழுவிற்கும் உதவிகளை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், பிரபாகரனின் ஆதிக்கம் பலமாக காணப்பட்ட காலத்திலும் இலங்கையுடன் இந்தியா உறவுகளைப் பேணி வந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு ரீதியில் இந்தியாவிற்கு இலங்கை மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். சில பாதுகாப்பு விடயங்கள் இரு நாடுகளையும் பாதிக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையுடன் நல்லவிதமான உறவுகளைப் பேணுவதே எமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 16ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment