Monday, January 02, 2012இலங்கை::அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு உத்தேசித்துள்ளது.
அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்கும் முனைப்புக்களில் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைவாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புக்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளதாகவும், அவர்கள் கொழும்பு திரும்பியதன் பின்னர் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment