Friday, January 27, 2012

இரு ருமேனிய நாட்டவர்களுக்கு சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Friday, January 27, 2012
இலங்கை::போலிக் கடனட்டையைப் பயன்படுத்தி வங்கியொன்றில் ஒரு இலட்சத்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாவை மோசடி செய்த இரண்டு ருமேனிய நாட்டவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா எட்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு ஐந்து வருடத்தால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இரண்டு ரூமேனிய பிரஜைகளில் ஒருவருக்கு 90,000 ரூபாவும், மற்றைய நபருக்கு 80,000 ரூபாவும் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்துவதற்கு தவறும்பட்சத்தில், தலா மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

போலிக்கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இந்த சந்தேகநபர்கள் இருவரும் மீண்டும் இலங்கை வருவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment