Friday, January 27, 2012

1971 இல் தாம் கூறியதை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Friday, January 27, 2012
இலங்கை::1971 இல் தாம் கூறியதை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ:-

சிங்கள மக்களுக்கு தமிழும், தமிழ் மக்களுக்கு சிங்களமும் கற்பிக்குமாறு தாம் 1971 ஆம் ஆண்டு கூறியதை, நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்காக தாய்நாட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டுகின்றார்.

மெனராகலை பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைக் கூறினார்.

அனைத்து சிறுவர்களுக்கும் மூன்று மொழிகள் தொடர்பிலான அறிவை பெற்றுக்கொடுக்கும் வகையில், மும்மொழி செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

மஹிந்த சிந்தனை செயற்திட்டத்தின் ஊடாக ஊவா - வெல்லஸ்ஸ மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், 10,000 காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment