Thursday, January 12, 2012

2 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை மும்பைக்கு கடந்த முயற்சித்த ஒருவர் கட்டுநாயக வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகளால் கைது!

Thursday, January 12, 2012
இலங்கை::2 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை மும்பைக்கு கடந்த முயற்சித்த ஒருவர் கட்டுநாயக வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகளால் கைது:-

2 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை கடந்த முயற்சித்த ஒருவர், கட்டுநாயக வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதுடைய இலங்கையரான இவர் இந்தியாவின் மும்பைக்கு இந்த தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுச் செல்ல முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இ;வவாறு இவர் 18 தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனிடையே, சட்டவிரோதமான முறையில் 31 ஆயிரம் அமெரிக்க டொலர்களை தாய்லாந்திற்கு கொண்டுச் செல்ல முற்பட்ட தாய்லாந்து பெண்னொருவர் கட்டுநாயக வானூர்தி தள பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட இந்த பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட நாணயங்களில் பெறுமதி 35 லட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இன்று அதிகாலை 1.45 அளவில் பேங்போக் செல்ல தயாரன நிலையில் இருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment