Tuesday, January 3, 2012

பெண் வழக்கறிஞர்களின் தேசிய மாநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.20 லட்சம் நிதியுதவி!

Tuesday, January 03, 2012 12
சென்னை: பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடக்கும் 3 நாள் தேசிய மாநாட்டுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார். அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தேசிய மாநாடு, வரும் 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து 1000க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி, போக்குவரத்து மற்றும் உணவு வசதி செய்து கொடுக்க, தங்களிடம் நிதி வசதி போதுமானதாக இல்லை என்றும், நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, அரசின் மானியமாக ரூ.20 லட்சம் நிதியை தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்த குமாரியிடம் நேற்று வழங்கினார்.

No comments:

Post a Comment