Wednesday, January 4, 2012

வன்னியில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முகாம்களில் கைது செய்யப்பட்ட 11 புலிச்சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு உத்தரவு!

Wednesday,January,04,2012
இலங்கை::வன்னியில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அகதி முகாம்களில் இருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 11 புலி சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூஸா தடுப்பு முகாமில் இருந்த இவர்கள் ஆரம்பகட்ட விசாரணைகளில் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தமை தெரியவந்துள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு மறுவாழ்வு அளித்த பின்னர் அவர்கள் தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment