Wednesday, December 7, 2011

முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க கையெழுத்து பெற்று ஐ.நா.வுக்கு (UN) முறையிட ஐ.தே.க செயற்குழுவில் தீர்மானம்!

Wednesday,December,07,2011
இலங்கை: முன்னாள் இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனித உரிமையை பாதுகாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து கட்சிகள் மற்றும் நிறுவனங்களை இணைத்து சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக வேண்டி 10 லட்சம் பொது மக்கள் கையெழுத்துக்களைப் பெற்று ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளிக்க உள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கையெழுத்து பெறும் திட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் கையெழுத்துடன் எதிர்வரும் 10ம் திகதி கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் மாகாண, மாவட்ட, தேர்தல் தொகுதி மட்டங்களில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ குறிப்பிட்டார்.

இந்த கையெழுத்து பெறும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமை தாங்கவுள்ளார்.

No comments:

Post a Comment