Friday, December 9, 2011

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் சகல வழிகளிலும் முயற்சி எடுத்து வருகிறது:பிரச்சினைக்கு தீர்வுகாண TNA முன்வர முன்வரவேண்டும்-கெஹெலிய!

Friday, December 09, 2011
இலங்கை: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் சகல வழிகளிலும் முயற்சி எடுத்து வருகிறது. மூன்று விடயங்களை மாத்திரம் பற்றிப்பிடித்துக் கொண்டிராமல் தீர்வுக்கான ஆரம்ப அடித்தளமாக ஏனைய விடயங்களில் இணக்கம் கண்டு பிரச்சினைக்கு தீர்வுகாண, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டுமென ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து வினவியதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட உள்ள பாராளு மன்ற தெரிவுக் குழு வில் அங்கம் வகிக் காதது குறித்து எதிர்க்கட்சிகள் அறிக்கை விட்டாலும் உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுநடத்த நான்கு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 2 நாட்கள் பேச்சுகள் நடைபெற்றன. பேச்சுக்களில் இருந்து ஒதுங்குவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவாக எதனையும் கூறாது அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகிறது.

திம்பு பேச்சுவார்த்தையின் போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதே நிலைப்பாட்டிலேயே இருந்தது. இடையில் பேச்சில் இருந்து வெளியேறியது. உள்ளே இருந்தவாறு போராட்டம் நடத்தியே தீர்வு காண முயல வேண்டும். பாதியில் ஒதுங்குவதென்பது பேச்சுக்களை குழப்பும் செயலாகும்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது வடக்கு, கிழக்கு இணைப்பு, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் ஆகிய மூன்று விடயங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடாப்பிடியாக உள்ளது. இந்த மூன்று விடயங்கள் இல்லாமலும் எவ்வளவோ தீர்வு வழிகள் இருக்கின்றன.

இந்த மூன்று விடயங்களும் பிரதானமானவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகையில் அதிகாரப் பகிர்விற்கான ‘மொடலாக’ கூறப்படும் இந்தியாவில் எந்த நிமிடமும் ஆளுநரினால் மாநிலத்தை கலைக்க முடியும். ஆனால் இங்கு அந்த நிலைமை கிடையாது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு மாகாண சபைகளுக்கன்றி மத்திய அரசிற்கே உள்ளது.

நாட்டின் மீது உண்மையான அன்பு இருந்தால் நெகிழ்ச்சித் தன்மையை காட்டி தீர்வுக்கு அடித்தளமொன்றை இட தமிழ்க் கூட்டமைப்புக்கு முடியும். த. தே. கூ. குறிப்பிடும் 3 விடயங்களில் இணக்கம் எழாவிட்டால் அவற்றை விடுத்து ஏனைய விடயங்களில் கருத்தொருமைப்பாட்டை எட்டி தீர்வுக்கு ஆரம்ப அடித்தளமிட வேண்டும். அதனைவிடுத்து 3 விடயங்களில் தொங்கிக் கொண்டிருப்பது பொருத்தமல்ல.

ஆரம்ப அடித்தளமாக மத்தியில் இருந்து தொடங்கி தீர்வுக்கான வழிவகைகளைக் காண தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment