Friday, December 09, 2011ராமநாதபுரம்:ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் ஸ்டிரைக் மூலம் பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. அவர்களை மீட்க கோரி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த நவ.,28 முதல் "ஸ்டிரைக்'கில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் வாடை பருவம் என்பதால், வழக்கமாக 40 முதல் 50 கிலோ வரை மீன்பாடு கிடைக்கும்.
டிசம்பர், ஜனவரியில் 80 முதல் 100 வரை கிடைக்கும். இதனால், ஒரு படகுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். ராமேஸ்வரத்தில் 1118 விசைப்படகுகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட சிறிய மீன் கம்பெனிகளும், 5 எக்ஸ்போர்ட் கம்பெனிகளும் நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 டன் மீன் வரை ராமேஸ்வரத்தில் கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1 முதல் 1.5 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடக்கும். எக்ஸ்போர்ட் கம்பெனிகள், ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்கி ன்றன. இதனால், அரசுக்கு கணிசமான அளவு அன்னிய செலவாணி கிடைத்து வந்தது. தற்போது இதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment