இறுதி போரில் அரச படைகளின் பக்கம் செல்ல முற்பட்ட பொது மக்கள் சுடப்பட்டதாக புலிகளின் முன்னாள் புலி பிரமுகர் கூறியுள்ளதாக பிரித்தானிய செய்தித்தாள் (‘The Independent’)குறிப்பிட்டுள்ளது!
Monday, December 12, 2011இலங்கை அரச படைகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தில் புலிகள் சிறுவர்களை வலுக்கட்டாயமாகச் சேர்த்து யுத்தத்தில் ஈடுபடுத்தியதாக புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வமற்ற முன்னாள் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சில இளைஞர்கள் ஒரு நாள் பயிற்சியின் பின்னரே யுத்தக் களத்திற்கு அனுப்பப்பட்டதாக பெயர் குறிப்பிடப்படாத புலிகள் இயக்கத்தின் இராணுவத்தில் பதவிவகித்த ஒருவரை மேற்கோள்காட்டி பிரித்தானியாவின் தி இன்டிபென்டன் (‘The Independent’) செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
அத்துடன் இறுதி போரில் அரச படைகளின் பக்கம் செல்ல முற்பட்ட பொது மக்கள் சுடப்பட்டதாக அந்த புலி முன்னாள் பிரமுகர் கூறியுள்ளதாக பிரித்தானிய செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
14 தொடக்கம் 55 வரையிலானவர்கள் புலிகள் இயக்கத்திற்கு சேர்க்கப்பட்டதாகவும் இறுதி போரின்போது 3 லட்சம் பொது மக்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் புலிகள் இயக்க முன்னாள் பிரமுகர் கூறியுள்ளார்.
இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் முடிந்தது. புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். ஆனால் அரசியல் தீர்வு இல்லை. இதனால் மக்கள் திருப்தியற்று உள்ளனர். என அவர் தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்கத்துடன் தொடர்பை பேணியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த நபர் எதிர்வரும் வருடம் நீதிமன்றில் தண்டனை பெறவுள்ளதாக பிரித்தானியாவின் தி இன்டிபென்டன் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment