Thursday,December 29, 2011இலங்கை::குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிந்து கொண்டால் அவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை பாராளுமன்றிற்கோ, மாகாணசபைகளுக்கோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களுக்கோ மக்கள் தெரிவு செய்யக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளுக்கு தமது வாக்குகளை அளிக்காமல் இருந்தால் அரசியல் கட்சிகள் குற்றவாளிகளை வேட்பாளர்களாக நிறுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய பிரஜை படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நிராகரிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment