Monday, December 5, 2011

உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிட்டால் சர்வதேசத்திற்கு செல்வதற்குத் தயங்கப் போவதில்லை-சரத்பொன்சேக்கா!

Monday, December 05, 2011
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா இன்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா இன்று விசேட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ஒருவரிடம் காண்பிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஆறு நாட்களுக்கு உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும் அதன் பின்னர் வைத்தியரை நாட வேண்டும் எனவும் இதன்போது மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, தன்னைப் பாதுகாப்பதற்காக குடும்பத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று முயற்சிப்பதாக அரசாங்கத்திற்கு பணிவிடை செய்யும் முட்டாள் சட்டத்தரணிகள் நேற்று ஊடகமொன்றில் கூறியிருந்தாகத் தெரிவித்தார்.

உள்நாட்டில் நியாயம் கிடைக்காவிட்டால் சர்வதேசத்திற்கு செல்வதற்குத் தயங்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தாம் நாட்டை நேசிப்பதாகத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சில சில அரசியல்வாதிகள் நாட்டைச் சூரையாடும் வரை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment