Monday, December 5, 2011

நேட்டோ தாக்குதலில் 24 வீரர் பலி, 10 நாட்கள் சர்ச்சைக்கு பிறகு : ஒபாமா வருத்தம்!

Monday, December 05, 2011
வாஷிங்டன் : பாகிஸ்தானில் பழங்குடியின பகுதியில் நேட்டோ படைகள், கடந்த மாதம் 26ம் தேதி நடத்திய விமான தாக்குதலில் 24 வீரர்கள் பரிதாபமாக பலியாயினர். இது எதேச்சையாக நடந்துவிட்டது, அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று நேட்டோ படையினரும் அமெரிக்காவும் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்று வெள்ளை மாளிகை மறுத்தது.

இதற்கிடையில் வீரர்கள் பலியான பின் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர், பாகிஸ்தானில் உள்ள விமான படை முகாமை காலி செய்ய உத்தரவிட்டனர். அதன்படி விமான படை வீரர்களை பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா திரும்ப அழைத்து கொண்டது. இருநாட்டு உறவில் பெரும் சிக்கல் எழுந்துள்ள நிலையில், 10 நாட்களுக்கு பிறகு நேட்டோ படை தாக்குதலில் வீரர்கள் பலியானதற்கு ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசிய ஒபாமா, Ôநேட்டோ தாக்குதல் ஒரு விபத்து. வேண்டுமென்று தாக்குதல் நடத்தப்படவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த அமெரிக்க தயாராக உள்ளது. வீரர்கள் பலியானதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்ÕÕ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment