Sunday, December 25, 2011

உலகின் முக்கிய மனித உரிமை அமைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு புலிகள் நிதி உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது!

Sunday, December 25, 2011
இலங்கை::உலகின் முக்கிய மனித உரிமை அமைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு புலிகள் நிதி உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் கனேடிய தமிழ் காங்கிரஸ் சர்வதேச மன்னிப்புச் சபைக்காக 50000 டொலர்களை திரட்டியுள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபைக்கான கனேடிய பொதுச் செயலாளர் அலெக்ஸ் நெவ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் நிதி திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

2005ம் ஆண்டு முதல் கனேடிய தமிழ் காங்கிரஸ் எவ்வாறு பணம் திரட்டி வருகின்றது என்பது சர்வதேச மன்னிப்புச் சபைக்குத் தெரியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமானத்திறகு எதிரான செயற்பாடுகளை புறந்தள்ளி, கனேடிய தமிழ் காங்கிரஸிடமிருந்து சர்வதேச மன்னிப்புச் சபை பணம் பெற்றுக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவில் வாழ்ந்து வரும் 250000 தமிழ் மக்களிடம் புலிகள் நிதி திரட்டி வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை கனேடிய தமிழ் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
இதேவேளை, கனேடிய தமிழ் காங்கிரஸின் பணத்தை ஏற்க வேண்டாம் என சமாதானத்தை விரும்பும் கனேடிய தமிழர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் கோரியுள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment