Tuesday, December 06, 2011உலக பொலீஸ் கருத்தரங்கில் பங்கேற்க பொலீஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் சிரேஷ்ட உதவிப் பொலீஸ் மா அதிபருடன் டுபாய் விஜயம்!
பொலீஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் சிரேஷ்ட உதவிப் பொலீஸ் மா அதிபருடன் (தென்மாகாண), வளைகுடா உலக பொலீஸ் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று டுபாய் சென்றுள்ளனர்.
இவ் கருத்தரங்கானது "சர்வதேச பொலீஸ் ஒத்துழைப்பு மூலம் பாதுகாப்பான உலகு" என்ற தொனிப் பொருளைக் கொண்டுள்ளது.
சமூக கொள்கைகள், கணனிசார் குற்றங்கள், ஆட்க்கடத்தல், பணமோசடி மற்றும் சட்ட அமுலாக்க செலாவணி போன்ற தலைப்புகள் இவ் கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளதாக பொலீஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரேஷ்ட உதவிப் பொலீஸ் மா அதிபர் காமினி நவரத்ன எதிர்வரும் வரும் டிசம்பர் 08 ஆம் திகதி வரை பொலீஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோகை்குப் பதிலாக பொலீஸ் மா அதிபராக கடமையாற்றுவார்.
No comments:
Post a Comment