Wednesday, December 7, 2011

தேவை ஏற்படின் காவற்துறையினர் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தடை இல்லை -இலங்கை காவற்துறை திணைக்களம்!

Wednesday,December,07,2011
இலங்கை: தேவை ஏற்படின், காவற்துறையினர் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தடை இல்லை என இலங்கை காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுடன் உறவை வளப்படுத்தும் வகையில் காவற்துறையினர் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் ஆயுதங்களை தவிர்தனர்

எனினும் இந்த சந்தர்ப்பத்தை குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மக்களுடனான உறவை பேணுவதுடன், ஆயுதங்களைப் பயண்படுத்தவும் காவற்துறையினருக்கு தடை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment