Saturday, December 3, 2011

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக இலங்கை அறிக்கை கோரியுள்ளது!

Saturday, December 03, 2011
இரண்டு படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ள இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அறிக்கை கோரியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ள இரண்டு படகுகளில் 95 இலங்கையர்கள் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையர்களைத் தவிர ஈராக் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் படகுகளில் இருப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் திஸர சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment