Saturday, December 03, 2011இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய வெளிவிவகார பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் சந்திப்பின்போது கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பகிரங்கமாக விமர்சித்ததைத் தொடர்ந்து, தற்பொழுது வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்டுவதில் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என பெயார்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப் போக்கு அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால் 2013ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என பிரதமர் ஹாப்பர் ஏற்கனவே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment