Thursday,December, 08, 2011புதுடெல்லி: சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெறுவதை தடுக்க இணையதளங்கள் தாமாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த வருண்காந்தி விமர்சித்துள்ளார். கூகுள், பேஸ்புக், யாகூ போன்ற சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெறுவது கவலை அளிக்கிறது. இது தொடர்வதை அரசு விரும்பவில்லை.
இந்த நாட்டில் உள்ள பல்வேறு பிரிவினரின் உணர்வுகளை அறிந்துள்ள எந்தவொரு பொறுப்பான மனிதரும், இதுபோன்ற அம்சங்கள் வெளிப்படையாக இடம் பெறுவதை விரும்ப மாட்டார்கள். சில இணையதளங்களில் இடம் பெற்றுள்ள சில விஷயங்கள், நாட்டின் பெரும்பான்மை மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துகிறது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை விரைவில் நீக்குவதற்கான வழிமுறைகள் இருந்தாலும் அவை இடம்பெறுவதற்கு முன்பு அவற்றை தணிக்கை செய்வதற்கான வசதிகளை இணையதளங்கள் உருவாக்க வேண்டும் என்று மத்தியஅரசு கூறி இருந்தது.
இக்கருத்துக்கு வருண்காந்தி கூறியதாவது: சமூக வலைதளங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதை தடுக்க இணையதளங்கள் வலைத்தளங்களை கட்டுப்படுத்தக்கூடாது எனவும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்க வாய்ப்பு இருப்பதாக அரசு தெரிவித்திருந்தாலும், இந்த முடிவுக்கு காரணம் மக்களின், நியாமான கருத்துக்களை பரப்பவிடாமல் செய்வதும், அதனால் பெரும் புரட்சி ஏற்படுவதை தடுபதுமே என்று வருண்காந்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment