Wednesday, December 7, 2011

இலங்கையில் ஆயுத பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு ரஸ்யா திட்டமிட்டுள்ளது-வொய்ஸ் ஒப் ரஸ்யா!

Wednesday,December,07,2011
இலங்கையில் ஆயுத பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு ரஸ்யா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை வொய்ஸ் ஒப் ரஸ்யா வெளியிட்டுள்ளது இந்த பராமரிப்பு நிலையங்களில் ரஸ்யாவில் அல்லது சோவியத்தில் தயாரிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களை பராமரிக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.

மலேசியாவில் நடைபெறும் ஆயுதக் கண்காட்சியின் போது இந்த தகவலை Rosoboronexport என்ற ரஸ்யாவின் ஆயுத ஏற்றுமதி இறக்குமதி நிறுவன உதவிப் பணிப்பாளர் விக்டோர் கொமார்டின் வெளியிட்டுள்ளார்.

ரஸ்யா இலங்கைக்கு எம் ஐ ரக நான்கு ஹெலிகொப்டர்களையும் 2 ஆயுத வாகனங்களையும் இராணுவ வீரர்களை காவிச்செல்லும் 19 வாகனங்களையும் வழங்கியுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 14 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வற்காக இலங்கை 300மில்லியன் டொலர்களை ரஸ்யாவிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் வொய்ஸ் ஒப் ரஸ்யா குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment