Wednesday,December,07,2011இலங்கை: இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள நான்காவது பாலி ஜனநாயக நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்ற ஜனாதிபதி இலங்கை நேரப்படி மாலை 5 மணியளிவில் இந்தோனேசியா பாலி – நுராரய் சர்வதேச வானூர்தி நிலையத்தை சென்றடைந்தார்.
இந்த தகவல் ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அங்கு சென்ற ஜனாதிபதியை அந்த நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் அந்தி மலரங்கன், பாலி ஆளுனர் மற்றும் முப்படையினர் வரவேற்றனர்.
இந்த முறை பாலியில் நடைபெவுள்ள, நான்காவது பாலி ஜனநாயகநாடுகளின் மாநாட்டின் கருப்பொருளாக அமைவது “ மாறும் உலகத்தில் ஜனநாயகத்தை ஈடுப்படுத்தி கொள்வதை மேம்படுத்தல் தொடர்பாக ஜனாநாயகத்திற்கு குரல் கொடுப்போரை வரவேற்பது என்பதாகும்.
No comments:
Post a Comment