Saturday, December 24, 2011

மகளைத் தாக்கி கொலை செய்த தந்தை கைது:பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

Saturday, December 24, 2011
இலங்கை::தனது மகளை தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் தந்தை ஒருவர் சம்மாந்துறை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரினால் 17வயதுடைய அவரது மகள் நேற்று மாலை தாக்கி கொலை செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகளின் காதல் விவகாரத்தினால் ஆத்திரமடைந்த அவரது தந்தை அவரை தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணகைளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

இரண்டரைக் கோடி ரூபா மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கொழும்பு ஊழல் விசாரணைப் பணியகத்தின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்திற்கு வீசா பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, அவர்கள் பலரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அது தொடர்பில் இதுவரையில் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் அக்கொன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment