Tuesday, December 6, 2011

யாரும் வன்முறையில் இறங்க வேண்டாம்:தமிழகம்-கேரளா இடையேயான உறவை சீர்குலைப் பவர்களுக்கு தண்டணை-உம்மன் சாண்டி!

Tuesday, December 06, 2011
திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு விவகாரத்தை பயன்படுத்தி, தமிழகம் மற்றும் கேரளா இடையேயான உறவை சீர்குலைக்கும் வகையில் கலவரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் மீதான வன்முறையை கேரளாவில் சிலர் ஏவியுள்ளனர். குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தமிழக சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள், தொழிலாளர்களைக் குறி வைத்து கடும் தாக்குதல் நடந்துள்ளது. தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தாக்கப்பட்டுளளன.

இதனையடுத்து, எல்லை நகரமான குமுளியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. தமிழகத்திலிருந்து அந்த பாதை வழியாக ஒரு வாகனமும் அனுமதிக்கப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, 'முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நாம் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்'.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி யாரும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், குறிப்பாக தமிழகத்துடனான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்...

முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக - கேரள எல்லை யில் பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் குமுளியில் தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று அங்கு தமிழர்கள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களை துரத்தி துரத்தி ஒரு கும்பல் தாக்கியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் சுமூக தீர்வு காண, தமிழகம் மற்றும் கேரளா இடையே அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து இருமாநில நீர்வளத் துறை செயலாளர்களுக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை கேரளா வரவேற்கிறது. பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே கேரளா விரும்புகிறது. தமிழகத்துக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பதே கேரளாவின் நிலைப்பாடு. குமுளி மற்றும் கம்பம் மேடு பகுதியில் சில துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் எந்த செயல்களிலும் ஈடுபடக் கூடாது. யாரும் சட்டத்தை கையிலெடுக்க அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார். முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment