Wednesday,December,14,2011இலங்கை::மரக்கறிகளை பிளாஸ்டிக் கூடைகளில் விநியோகிக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை வர்த்தகர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதோடு அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் இப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மரக்கறி சந்தைகளுக்கு அண்மையில் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்டமையால் கைதுசெய்யப்பட்ட 45 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரவளையில் கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை இன்றைய தினம் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment