Tuesday, December 13, 2011

இந்தியாவில் அதிகமாக பேசப்பட்ட விஷயம்‘ஊழல்’என்று பி.பி.சி சர்வே முடிவு!

Tuesday, December 13, 2011
லண்டன் : இந்தியாவில் சமீப காலமாக அதிகமாக பேசப்பட்ட விஷயம் ஊழல்’ என்று பி.பி.சி சர்வே முடிவு தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் சமீப காலத்தில் அதிகமாக பேசப்பட்ட விஷயங்கள் குறித்து பி.பி.சி சர்வே எடுத்தது. 23 நாடுகளில் சுமார் 11 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்டது. இதில், உலகம் முழுவதும் அதிகமாக பேசப்பட்ட விஷயமாக அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் இருந்தாலும், இந்தியாவை பொறுத்தவரை அதிகமாக பேசப்பட்ட விஷயம் ‘ஊழல்’ என்று தெரிய வந்துள்ளது. நைஜீரியா, இந்தோனேஷியா, பெரு போன்ற வளரும் நாடுகளிலும் ஊழல் பேச்சுதான் அதிகமாக காணப்பட்டிருக்கிறது.

கடந்த 2009ல் எடுக்கப்பட்ட சர்வேயிலும் வேலையில்லா திண்டாட்டம் அதி கமாக பேசப் பட்டிருந்தாலும், தற்போது 18 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதிலும் ஸ்பெயினில் 54 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட்டத்தைத்தான் முக்கிய விஷய மாக கருத்து கூறியுள்ளார்கள். இதற்கு அடுத்தபடியாக, உலகம் முழுவதும் வறுமையை பற்றி அதிகமாக மக்கள் பேசுகிறார்கள்.

பணவீக்கம், உணவு பொருட்கள் மற்றும் மின்கட்டண உயர்வுகள் அதிகமாக பேசப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் தற்போது பொருளாதார சரிவு குறித்து மக்கள் அதிகமாக கவலைப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment