Friday, December 9, 2011

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் செலவுகளை தமிழக அரசு ஏற்கும்: முதல்வர் ஜெயலலிதா!

Friday, December 09, 2011
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் வழக்குச் செலவுகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில், மீனவர்களை விடுவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அவர் இதனை அறிவித்தார். இதனையடுத்து, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், லேங்க்லெட், பிரசாத் மற்றும் வில்சன் ஆகிய 5 மீனவர்களையும் விடுவிக்க, அப்பாவி மீனவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 28-ந் தேதி 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். 5-ந் தேதி மல்லாகம் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு வரும் 19-ந் தேதி மேல் விசாரணைக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment