இலங்கை::சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.
போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது குறித்து அமெரிக்க தலையீடு செய்யும் என பிரசூரமான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கத் தூதுரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக 25000 கையொப்பங்களுடன் கூடிய இணைய மகஜர் ஒன்று வெள்ளை மாளி;கைக்கு சமர்ப்பிக்கப்பட்டால், அந்த மகஜர் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மகஜர் தொடர்பில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்க முடியாது அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் இணைய தளத்தில் ஒரு பகுதியில் மக்களின் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வீ த பீபல் முறையில் இணையத்தின் ஊடாக தாக்கல் செய்யப்படும் மகஜர்களை அமெரிக்க அதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள் எனவும், மகஜர் அனுப்பி தரப்பினருடன் தொடர்பு கொள்ளப்படும் எனவும், தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும், மகஜர் தொடர்பில் நிச்சயமாக அமெரிக்க அரசாங்கம் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்கும் என்று உத்தரவாதமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment