Wednesday, December 14, 2011

சர்வதேச பொலிஸ்காரர் ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது-வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Wednesday,December,14,2011
இலங்கை:சர்வதேச பொலிஸ்காரர் ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் பொதுநலவாய நாட்டு மனித உரிமை ஆணையாளர் ஒருவரை நியமிப்பது குறித்த யோசனைக்கு இலங்கை பூரண எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்த விடயம் குறித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்ததோடு, மனித உரிமை விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் அஞ்சுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment