Wednesday,December,14,2011இலங்கை::கைதிகளின் நலன் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறைச்சாலைகளில் அதிகளவான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு நெரிசல் மிக்க சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் யோவிஸ் கியோவனோனி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் கருத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதிகளவான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் சில ஏனைய சில நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக் கைதிகளின் நிலைமை திருப்தி அடையக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளது என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment