Wednesday, December 14, 2011

புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் இலங்கையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்!

Wednesday,December,14,2011
இலங்கை::இலங்கையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். புலிகளின் சிரேஸ்ட தலைவர்களது குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும், குடும்ப உறுப்பினர்கள் கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என புலனாய்வுப் பிரிவு உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட சிலர் கடவுச் சீட்டு பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியிட்ட முன்னாள் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் சிலர் மேலதிக பயிற்சிகள் என்ற போர்வையில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment