Friday, December 09, 2011இடுக்கி: முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள சட்டப்பபேரவையின் சிறப்புக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், அணையின் நீர் அளவை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சட்டப்பேரவையின் ஒருநாள் சிறப்புக்கூட்டத்தை கேரள அரசு இன்று கூட்டியது. இதில், முல்லைப்பெரியாறு அணை பகுதியில் தொடர் நில
அதிர்வுகள் காரணமாக கேரள மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு செயல்படுவதாக கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி
குற்றம் சாட்டினார்.
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்வைத்த உம்மன் சாண்டி, புதிய அணை கட்டப்பட்டாலும்,
தமிழகத்துக்கு அதே அளவு தண்ணீர் தரப்படும் என்றார். இந்த பிரச்சினையை தமிழகத்துடனான நல்லுறவு கெடாமல் தீர்த்துக்கொள்ள விரும்புவதாக அவர்
கூறினார்.
புதிய அணை கட்டும் அரசின் முடிவை ஆதரிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தனும் தெரிவித்துள்ளார். கூட்டத்தின் இறுதியில் அணையின்
நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைப்பது, புதிய அணை கட்டுவது போன்ற முடிவுகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment