Friday, December 9, 2011

தமிழக மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!

Friday, December 09, 2011
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் வாடும் 5 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மேற்கொண்ட காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன .

மேலும் இலங்கை சிறையில் உள்ள 5 பேரையும் விடுவிக்கக்கோரி, கடந்த 10 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மீனவர்கள், ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மீனவ பெண்களும், மீனவர்களும் மாலையில் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

சிறையில் உள்ள மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் உத்ரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நடத்திய வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment