Wednesday,December,07,2011உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சித்து வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தோற்கடித்த காரணத்தினால் இவ்வாறு சில சக்திகள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படையற்ற இந்த குற்றச்சாட்டுக்களை வெற்றிகரமாக முறியடிக்க சகல இன சமூகங்களினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இன சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தின் மூலமே நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்பதனை தமிழ் முஸ்லிம் சிறுபான்மையினர் விளங்கிக்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழ் சமூகம் ஒரு அரசியல் கட்சி நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும், இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இன சமூகத்தின் சிறந்த வரவேற்பு காணப்படுவதாகவும் இதனால் தமிழ் முஸ்லிம் இன சமூகங்கள் நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment