Wednesday, December 7, 2011

மட்டக்களப்பில் சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டுவந்த 3 இந்திய பிரஜை மட்டக்களப்பில் கைது!

Wednesday,December,07,2011
சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டுவந்த மற்றுமொரு இந்திய பிரஜை மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாலை களுவாஞ்சிக்குடி மானெல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய இந்திய பிரஜையாவார்.

அம்பாறை - கல்முனையிலும் சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு இந்திய பிரஜைகள் கைது!

சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டுவந்த மேலும் இரு இந்திய பிரஜைகள் அம்பாறை - கல்முனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை - மல்வத்தை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 2000 ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டதோடு கல்முனை பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment