Wednesday,December,07,2011சென்னை: சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கேரள மாநிலத்தவரின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை, கோவையில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடைகளையும் தமிழர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக குமுளியில் தமிழர்களின் கடைகளை கேரளத்தினர் அடித்து நொறுக்கியதாக செய்திகள் வெளியானது. இதனால் கோபமடைந்த கம்பத்தில் கேரளாக்காரர்களின் கடைகள், நிறுவனங்களை தமிழர்கள் சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்த நிலையில் தஞ்சாவூரில் இன்று கேரள வியாபாரிகளின் கடைகளை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்கினர். ராயல் காபி பார் மற்றும் ஒரு குளிர்பானக் கடை ஆகியவை தாக்கப்பட்டன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை முழுவதும் உள்ள கேரள வியாபாரிகள் தங்களது கடைகளை மூடி விட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கேரளாவில் தமிழர்களையும், அவர்களது கடைகளையும் தாக்கியதற்கு இது பதிலடி என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து தஞ்சையில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சென்னையிலும் தாக்குதல் நடந்துள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள கேரள வியாபாரிக்குச் சொந்தமான ஸ்வீட் ஸ்டாலை ஒரு கும்பல் புகுந்து தாக்கி அங்கிருந்த ஷோ கேஸ்களை அடித்து உடைத்தது. இதில் கண்ணாடி குத்தி கடை ஊழியருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதேபோல சென்னை தி.நகரில் உள்ள ஜோய்ஆலுக்காஸ் நகைக் கடையை தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்...
கோவையில் கேரள மாநிலத்தவரின் நகைக்கடைகள் அடித்து உடைப்பு!
கோவை: கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள கேரள மாநிலத்தவரின் நகைக்களை தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியினர் அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
கிராஸ்கட் சாலையில் அமைந்துள்ள 4 நகைக்கடைகளை தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியினர் அடித்து உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment