Wednesday,December,07,2011சென்னை: சென்னை வானூர்தி நிலையத்தில் அதிக அளவில் தங்க கடத்தல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதில் இலங்கையர்களே அதிக அளவில் ஈடுபட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் இருந்து இன்று வரையில் 63 தங்க கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சென்னை சுங்க திணைக்கள ஆணையாளர் சன்ஜை குமார் அகர்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து செல்கின்ற பலர், பல்வேறு நோக்கங்களுக்காக இந்தியாவில் தங்கத்தை அதிக விலையில் விற்கும் நோக்கில் கடத்திச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்க கடத்தல் தொடர்பில் அதிக அளவலான இலங்கையர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment