Sunday, December 04, 2011ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட முன்வருமாறு கட்சியின் பிரதித் தலைவரான கரு ஜயசூரியவிடம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் மற்றுமொரு பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவசர மற்றும் கௌரவ தேவையாகக் கருதி கட்சித் தலைமைத்துவ பொறுப்பிற்காக போட்டியிடுமாறு குறிப்பிட்டு கரு ஜயசூரியவிற்கு சஜித் பிரேமதாச கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் பிரதிகள், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வலுவிழந்துள்ள கட்சியை, சவால்களை எதிர்கொண்டு வெற்றியுடன் முன்னெடுப்பதற்கு தகுதியுடைய ஒரேயொருவர் கரு ஜயசூரிய என சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment